News

போர் நிறுத்தம் மீறப்பட்டால் ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

நாம் இனிமேலும் நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு நிலை வரலாம். அப்போது நாம் மிகவும் வெற்றிகரமாகத் தொடங்கிய பணியை இராணுவ ரீதியாக முடிக்க நிர்பந்திக்கப்படுவோம். அப்படி நடந்தால், ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது.” என குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க இராணுவ விமானங்கள் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அதன் அருகிலும் உள்ள பல இடங்களில் 10 ஈரானிய இராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அமெரிக்க மத்தியப் படை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top