News

AI வடிவமைத்த உலகின் முதல் தடுப்பூசி – மனித பரிசோதனையில் வெற்றி

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வடிவமைக்கப்பட்ட pEVAC-PS எனும் புதிய தடுப்பூசியை மனிதர்களில் பரிசோதித்து வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி, வழக்கமான ஊசி முறையில் இல்லாமல், micro fluid jet-like device மூலம் தோலுக்குள் செலுத்தப்பட்டது.

18 முதல் 50 வயதுக்குள் உள்ள 39 ஆரோக்கியமான தன்னார்வலர்கள், சவுதாம்ப்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் இந்த பரிசோதனையில் பங்கேற்றனர்.

இந்த தடுப்பூசி, குறிப்பிட்ட ஒரு வைரஸ் வகையை மட்டுமல்லாமல், Sarbeco coronavirus குடும்பத்திலுள்ள பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் COVID-19 ஏற்படுத்திய SARS-CoV-2, SARS மற்றும் வவ்வால்களிலிருந்து பரவக்கூடிய பிற கொரோனா வைரஸ்களும் அடங்கும்.

AI தொழில்நுட்பம், உலகளாவிய ஜெனோமிக் தரவுகளை ஆய்வு செய்து, அனைத்து வைரஸ் வகைகளுக்கும் பொதுவான ஒரு antigen உருவாக்கியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய வைரஸ் வகைகளுக்கும் எதிர்ப்பு சக்தி அளிக்க முடியும்.

முதல் கட்ட பரிசோதனையில், 0.2 mg முதல் 1.2 mg வரை நான்கு அளவுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எந்தவிதமான பெரிய பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

விஞ்ஞானிகள், “இந்த AI தடுப்பூசி, எபோலா, இன்ஃப்ளூயன்சா போன்ற பல்வேறு வைரஸ்களுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளை உருவாக்கும் முறையை மாற்றும் திறன் கொண்டது” என்று தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top