News

உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ தோல்வியடைந்த கனடா

கனடாவை வீழ்த்தி மொராக்கோ அணி 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சனிக்கிழமை ஹூஸ்டனில் நடந்த 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16  சுற்றில் கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

இந்த போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

ஆட்டத்தின் 50 வது மற்றும் 82 வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் நட்சத்திர வீரர் அசெடின் ஓனாஹி (Azzedine Ounahi) தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து போட்டியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 8 வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் சுஃபியான் ரஹிமி கோல் ஒன்றை அடித்து மொராக்கோ அணியின் வெற்றியை 3-0 என உறுதி செய்தார்.

கனடா அணி எவ்வளவு போராடியும் வெற்றிக்கான கோல்களை இறுதி வரை அடிக்க முடியாததால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ: படுதோல்வியடைந்த கனடா | Morocco Beat Canada And Secures Quarter Final

மொராக்கோ அணியின் இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் பராகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியின் வெற்றியாளருடன் காலிறுதிப் போட்டியில் மொராகோ அணி பலப்பரீட்சை செய்யும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top