News

சவுதி மீது ஈரான் ஆதரவு ஈராக் கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

 

ஈரான் , சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்த மோதலின்போது மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

மேலும், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் சில பகுதிகள் மீது சவுதி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஈராக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் கிளர்ச்சியாளர்கள் இன்று டிரோன் மூலம் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வயல்கள், கிடங்குகள், கிணறுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த டிரோன்களை சவுதி வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் வைத்தே சுட்டு வீழ்த்தியுள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top