ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகளை முடக்கியதாகக் குற்றம்சாட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் சீர்குலைக்கும் வகையில் இராணுவ, சட்ட மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்த ஐந்து நபர்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஈரானைப் பதற்றத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய பொருளாதாரத் தடைகள், இந்தக் கொள்கைகளைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்களை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
