News

கொலம்பியாவை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்.. 132 பேர் பலி – 2000 பேர் மாயம் – அதிரவைக்கும் வீடியோ, புகைப்படங்கள்

 

கொலம்பியாவில் நேற்று இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தலைநகரான பகோடாவுக்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் உள்ள சோகோ

அருகே சான் ஜோஸ் டெல்பால்மர் பகுதியில் மையங்கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது

 

ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்கா மற்றும் கொலம்பியாவின் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.தொடர்ந்து பல நில

அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கொலம்பியாவில் நேற்றிரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது.

நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,

நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

காலி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தூசிப் படலம் பரவியது. பயத்தில் மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து குதித்தும் தப்பிக்க முயன்றனர்.

பெரேரா நகரில் 4 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

மேனிசேல்ஸ் நகரின் புகழ்பெற்ற நவதோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் பக்கவாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது.

அவசரகால நிதியாக கொலம்பியாவுக்கு சுமார் ரூ.130 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ஆகிய லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் கொலம்பியாவுக்கு தேவையான மருத்துவக் குழுக்கள், மீட்புப் படைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top