News

வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு – 54 பேர் படுகாயம்

வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாகவே இந்த காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஜிஜெல், பெஜாயா மற்றும் திசி ஓசோ ஆகிய மாகாணங்களில் அதிகளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 69 இடங்களில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்தப் பகுதியில் தீவிர வெப்ப அலை மற்றும் காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக உலக வானிலை அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top