News

இந்தோனேசியாவில் கடலில் திடீரென மாயமான பயணிகள் கப்பல்: 102 பேர் பத்திரமாக மீட்பு- மீதியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம்

 

இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கடல் நடுவே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா துறைமுகத்தில் இருந்து தெற்கு கலிமந்தன் நோக்கி ‘வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. ஜாவா கடல் பகுதியில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மோசமான வானிலை காரணமாகக் கடல் சீற்றம் அடைந்தது. இதில் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, கப்பல் மாயமானது.

தகவல் அறிந்தவுடன் இந்தோனேசியத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அதிவிரைவாகச் சம்பவ இடத்திற்கு மீட்புக் கப்பல்கள் மற்றும் படகுகளுடன் விரைந்தனர். தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, இதுவரை 102 பயணிகள் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 139 பயணிகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கைகள் இரவிலும் இடைவிடாமல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படை, மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் படகுகள் உதவியுடன் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடனும் கவலையுடனும் மீட்பு மையங்களில் காத்திருக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top