News

இந்தோனேசியாவில் காட்டுத்தீ: 4 பேர் பலி

 

இந்தோனேசியாவில், தற்போது வறட்சியின் காரணமாகக் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள புகழ்பெற்ற மவுண்ட் புரோமோ தேசிய பூங்காவில் கடந்த சில நாட்களாகக் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தப் போராடிய 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பலத்த காற்றினால் திடீரென பரவிய அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டனர். இதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயால் எழுந்த நச்சுப்புகை பக்கத்து நாடான மலேசியா வரை பரவியுள்ளதால், அங்குள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் அவசரமாக மூடப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top