News

கனடா: பிரெஞ்சு பேசும் 5,000 தொழிலாளர்களுக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

 

 

பிரெஞ்சு பேசும் 5,000 தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

கனடா அரசு, Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மூலம், பிரெஞ்சு மொழித்திறன் கொண்ட 5,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கு (Permanent Residence) விண்ணப்பிக்க அழைப்பு வழங்கியுள்ளது.

இந்த அழைப்புகள் Express Entry முறையின் மூலம் வழங்கப்பட்டன. இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் 435 பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அவர்கள் 2026 அக்டோபர் 6, இரவு 9:31:22 UTC-க்கு முன்னர் Express Entry ப்ரொஃபைல் உருவாக்கியிருக்க வேண்டும்.

இந்த அழைப்பின் மூலம், கனடாவில் வேலை அனுமதி (Work Permit) விரைவில் காலாவதியாகும் வெளிநாட்டு தொழிலாளர்கள் Bridging Open Work Permit (BOWP) பெறும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம், அவர்கள் கனடாவில் தங்கியிருக்கும் வரை, தற்போதைய வேலை அனுமதி விதிமுறைகளின் கீழ் தொடர்ந்து வேலை செய்ய முடியும்.

2026-ஆம் ஆண்டில் இதுவரை 62 Express Entry Draws நடத்தப்பட்டுள்ளன. இதில், 143,467 ITAs (Invitations to Apply) வழங்கப்பட்டுள்ளன. அதில், French-Language proficiency அடிப்படையில் மட்டும் 55,500 ITAs வழங்கப்பட்டுள்ளன. இது, கனடா அரசு பிரெஞ்சு மொழி பேசும் தொழிலாளர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த நடவடிக்கை, கனடாவின் இருமொழி (Bilingual) பண்பாட்டை வலுப்படுத்துவதோடு, பிரெஞ்சு பேசும் சமூகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும், கனடாவின் வேலை சந்தையில் திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top