Canada

கனடா மீதான வர்த்தக வரிக் கொள்கை! ட்ரம்பை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கனடா மீதான வர்த்தக வரிக் கொள்கைகளை அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விவரித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பொருட்களின் விலையை உயர்த்துவதுடன் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மிச்சிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான அப்துல் எல்-சயீத் மற்றும் ஜோஸ்லின் பென்சன் ஆகியோருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடா அமெரிக்காவின் வரலாற்று எதிரி என்ற தொனியில் ட்ரம்பின் அணுகுமுறையை நையாண்டி செய்த ஒபாமா, அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவை ஓர் அச்சுறுத்தலாகக் கருதுவது அபத்தமானது எனக் குறிப்பிட்டார்.

மேலும், கனடா மக்களின் நட்புணர்வையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும் சுட்டிக்காட்டிய அவர், கனடா அமெரிக்காவுக்கு மார்ட்டின் ஷோர்ட் போன்ற கலைஞர்களையும் மேப்பிள் சிரப் போன்ற புகழ்பெற்ற உணவுப் பொருட்களையும் வழங்கிய நாடு என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவது குறித்த ட்ரம்பின் கருத்துகளும் கனேடிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஒபாமா சுட்டிக்காட்டினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top