News

பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வி; போல்சோனாரோ குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பியோட்டம்

 

பிரேசில் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் லூலா டி சில்வா வெற்றியடைந்தார். இந்தத் தேர்தலில் பலரும் எதிர்பார்த்த பிளவியோ போல்சோ னாரோ அதிர்ச்சி தோல்வியடைந்தார். இச்சூழலில், அவரது எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அவர் மீதான பணமோசடி வழக்கில் கைது நடவ டிக்கை பாயும் என்ற சூழல் உருவானது.

இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு 24 மணி நேர அதிரடி கெடு விதித்தது. ஆனால், தான் நாட்டை விட்டு ஓடமாட் டேன் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பிளவியோ போல்சோ னாரோ, நள்ளிரவில் ரகசியமாகத் திட்டமிட்டு காரில் அர்ஜென்டினா எல்லைக்குள் நுழைந்தார்.

அங்கிருந்து தனி விமானம் மூலம் ஈக்வடார் நாட்டுக்குச் சென்று, தற்போது அமெ ரிக்காவின் மியாமி நகருக்குத் தப்பியோடியுள்ளார். அவருக்கு அமெரிக்க அரசு அவசர விசா வழங்கியுள்ளதாகவும், டிரம்ப் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோர்ட்டு கெடுவுக்கு பயந்து பிரேசில் எம்.பி. குடும் பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் சர்வதேச அரசியலில் பெரும் புய லைக் கிளப்பியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top