News

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.9 ஆக பதிவு

 

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓசெர்னோவ்ஸ்கி நகருக்கு வடகிழக்கே 76 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக கடந்த 2025 ஜூலையில் 8.8 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இங்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top