News

எபோலா பாதிப்புக்கு 5,500 பேர் பலி; 11 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி

 

எபோலா பாதிப்புக்கு 5,500 பேர் பலியாகி உள்ளனர். 11 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலா வைரசின் பரவல் தீவிரமடைந்து உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு தொற்று உறுதியான நாளில் இருந்து இதுவரை 5,500 பேர் பலியாகி உள்ளனர். 11 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

காங்கோவில் இதற்கு முன்பு பல முறை எபோலா பாதிப்பு ஏற்பட்டபோதும், இந்த முறை ஏற்பட்டுள்ள தொற்று விகிதம் மற்றவற்றை பின்னுக்கு தள்ளியுள்ளது.

2018-2020-ம் ஆண்டுகளில் 3,481 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், 2,299 பேர் பலியானார்கள். அந்த எண்ணிக்கையை இந்த விகிதம் முன்பே முறியடித்து விட்டது.

இதனை முன்னிட்டு, உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. இந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்து உள்ளன. இந்த பரவலுக்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது.

கென்யா, உகாண்டா, நைஜீரியா நாடுகளுக்கு பாதிப்பு பரவி உள்ளது. 2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் நாடுகளில், எபோலா பரவலின்போது 28,600 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, ஏற்பட்ட 2-வது கொடிய பரவலாக தற்போது காணப்படும் வைரசின் பரவல் உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top