News

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கர லாரி விபத்து – 14 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவில் உள்ள ஷேக் கலீஃபா பின் ஜாயித் பகுதியில் வியாழக்கிழமை இரவு (12) நடந்த ஒரு பயங்கர லாரி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் ஈடுபட்ட லாரியின் ஓட்டுநர் அதை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது பல வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் இந்திய நாட்டினர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து லாரியில் ஏற்பட்ட தீ, பல வாகனங்களுக்கும் பரவி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாகச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் அணிவகுப்பின் மீது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்தத் துயரம் நிகழ்ந்ததாக ஃபுஜைரா பொலிஸார் அறிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top