அமெரிக்கா – வாஷிங்டன் டிசியின் வடமேற்குப் பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகன் சர்க்கிள் (Logan Circle) பகுதியில் உள்ள 15ஆவது மற்றும் பி (P) தெருக்களின் சந்திப்புக்கு அருகில் காலை 8.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்த சந்தேகநபர், உள்ளே இருந்த ஒருவரைச் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கட்டிடத்தை விட்டு வெளியேறி, அருகிலுள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, சந்தேகநபர் பொலிஸாரையும் நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
