Canada

2027ஆம் ஆண்டுக்கான கனடாவின் புலம்பெயர்தல் திட்டம் குறித்து வெளியான தகவல்

 

 

கனடாவின் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் மட்டம் குறித்த தகவல்கள் பட்ஜெட் வாயிலாக தெரியவந்துள்ளன.

கனடா அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் ஒரே அளவிலான புலம்பெயர்தல் மட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது.

கனடா அரசு, 2027, 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 தற்கால குடியிருப்பு அனுமதிகளை மட்டுமே வழங்குவது என முடிவு செய்துள்ளது.

அதேபோல, அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளுக்கும், ஆண்டொன்றிற்கு 380,000 பேருக்கு மட்டுமே நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளை வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளது.

அத்துடன், 2027ஆம் ஆண்டின் முடிவுக்குள், 200,000 தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது.

கனடாவின் புதிய புலம்பெயர்தல் திட்டம், கனடாவின் பொருளாதாரத்துக்குப் பயன்படும் அதே நேரத்தில், பொருளாதாரத்துக்கும், வீடுகள், மருத்துவம் மற்றும் சமூக சேவைகள் ஆகிய விடயங்களுக்கும், சாதகமான ஒரு சமநிலையை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்கிறது பட்ஜெட்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top