மொசாம்பிக்கின் தெற்கு கடலோர மாகாணங்களில் ஒன்றான இன்ஹேம்பன் மாகாணத்தில் கிஜானி என்ற சூறாவளி கடுமையாக தாக்கி வருகிறது. இதற்கு முன் மடகாஸ்கரை இந்த சூறாவளி கடுமையாக தாக்கியதில் 41 பேர் பலியானார்கள்.
கால்நடைகள் உயிரிழந்து உள்ளதுடன், பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததுடன், வீடுகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மொசாம்பிக்கில் இன்ஹேம்பன் மாகாணத்தில் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
1 லட்சம் பேர் வசிக்க கூடிய இந்த மாகாணத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மின் விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு தேசிய மின்சார நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
