இன்று (06) விடியற்காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து முன்னெடுத்த ஏவுகணைத் தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட IRGC-இன் அறிக்கையில், “அமெரிக்க – சியோனிச எதிரிகளால்” நடத்தப்பட்ட தாக்குதலில் மஜீத் ஹதேமி வீரமரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஈரானின் உளவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மிக முக்கியமான மற்றும் உயர்மட்ட அதிகாரியாகக் கருதப்பட்டவர். இவரது இழப்பு ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் 45 நாள் போர்நிறுத்தம் மற்றும் ‘இஸ்லாமாபாத் உடன்படிக்கை’ குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக உயரிய இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருப்பது இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
