News

ஹோர்முஸில் கணக்கின்றி ஈரான் வீசியுள்ள ஆபத்தான ஆயுதங்கள்.. அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப்!

உலக எண்ணெய் விநியோகத்தின் இதய நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறக்க முடியாமல் ஈரான் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் விதைத்த கண்ணிவெடிகளே தற்போது அந்நாட்டிற்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

அணுசக்தி பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சிறிய படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் புதைத்தது.

ஆனால், தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த கண்ணிவெடிகள் எங்கே இருக்கின்றன என்பதை ஈரானால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் எவ்வித வரைபடமும் இன்றி கண்ணிவெடிகளை இட்டதால், அவை இப்போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு எங்கே இருக்கின்றன என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக எண்ணெய் விநியோகத்தில் 25 சதவீதத்தைக் கொண்டு செல்லும் இந்தப் பாதையை உடனடியாகத் திறக்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

பிரதான பாதையில் கண்ணிவெடி அபாயம் இருப்பதால், கப்பல்கள் செல்வதற்கு ஈரான் மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், இது சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தியாவின் 80 சதவீத எரிசக்தி இறக்குமதி இந்தப் பாதையூடாகவே நடப்பதால், இந்த விவகாரம் ஆசிய நாடுகளிடையே பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top