News

ஈரானுக்கு ஆயுத உதவி! அதிரடித் தடை விதித்துள்ளஅமெரிக்கா

ஈரானின் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ‘ஷாஹெட்’ (Shahed) ட்ரோன்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெறுவதற்கு உதவிய, 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்தத் தடைகள் குறிப்பாக ஹொங்காங் மற்றும் சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்களை இலக்கு வைத்து விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ஈரானின் இத்தகைய சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விமான நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க திறைசேரி எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தற்போது தோல்வியை சந்திக்கும் சூழலில், அமெரிக்காவின் இந்தத் தடை நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top