News

பாகிஸ்தானில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய வேன்.. 17 பேர் உடல் நசுங்கி பலி,10 பேர் படுகாயம்

 

பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாத் நகரிலிருந்து பெஷாவர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, இயந்திர கோளாறு காரணமாகச் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

பேருந்தை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கிச் சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மிக அதிவேகமாக வந்த வேன் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்து, பழுதாகி நின்ற பேருந்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து பயணிகள் மற்றும் அருகில் நின்றவர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், காயமடைந்த 10 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top