மியான்மர் நாட்டின் ஷான் மாகாணத்தில் நம்காம் நகரில் கவுங் தத் கிராமத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இந்த இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்து உள்ளது. அவர்களில் 25 பேர் பெண்கள். 30 பேர் ஆண்கள் ஆவர். வெடிவிபத்து ஏற்பட்டதில் நூற்றுக்கும் கூடுதலான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுதவிர 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கின்றனர் என்றும் இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் மீட்பு குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சூழலில், சுரங்க வெடிப்புக்கு பயன்படும் வெடிபொருட்களை கொண்டு தற்செயலாக வெடிக்க செய்திருக்க கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
