News

அமெரிக்க விமான படைத் தளத்திலேயே விழுந்து நொறுங்கிய குண்டுவீச்சு விமானம் – 8 பேர் உயிரிழப்பு

 

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாகாணத்தில் அமைந்துள்ள மோஜாவே பாலைவனத்தில் அமெரிக்க ராணுவத்தின் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளம் அமைந்துள்ளது.

இங்கு, பி-52 ரக போர் விமானம் ஒன்று நேற்று வழக்கமான சோதனை ஓட்டத்திற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

கீழே விழுந்ததும் விமானம் பெரும் தீப்பற்றி எரிந்து மொத்தமாக நாசமானது. இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து எட்வர்ட்ஸ் தளத்தின் 412 ஆவது சோதனைப் பிரிவின் துணைத் தளபதி கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“விபத்தின் தீவிரத்தை வீடியோ பதிவுகள் மூலம் ஆய்வு செய்ததில், இதில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. நாம் 8 சிறந்த அமெரிக்கர்களை இன்று இழந்துவிட்டோம்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உயிரிழந்தவர்களில் சீருடை அணிந்த ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போயிங் விமான நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் அடங்குவர்” என தெரிவித்துள்ளார்.

விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த பி-52 ரக விமானங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top