News

லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு – தரையிறங்கிய விமானத்தில் தொங்கிய சடலம்

பிரித்தானியாவின் லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம் ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

மொராக்கோவின் Tangier நகரிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த Air Arabia Maroc நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் சக்கரத்தின் பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மீட்பு குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டனர்.

லண்டன் கேட்விக் அவசரப் பிரிவினரும், சசெக்ஸ் பொலிஸாரும் சடலத்தை மீட்டுள்ளனர். இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top