கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில், மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 2 மணி அளவில் பெய்த பலத்த மழையால் ‘தார் எஸ் சலாம்’ (Dar Es Salam) பகுதியில் உள்ள குப்பைகள் அடித்து செல்லப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்; பல வீடுகள் சேதமடைந்தன.
நகரின் மிகப்பெரிய திறந்தவெளி குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமையன்று மூடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக, ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ தெரிவித்தார்.
