News

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு1,545 பேர் காயம்… 1,924 மாயம்!

 

நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வடைந்து உள்ளது. 1,545 பேர் காயம் அடைந்தனர்1,924 பேரைக் காணவில்லை என நேபாள பேரிடர் நிவாரண மையம் தெரிவித்துள்ளது….

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பனிப்பாறை உருகி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி கொண்டனர்.

இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் 8 மாவட்டங்களில் இருந்து 579 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்களில் அதிக அளவாக சித்வான் மாவட்டத்தில் 233 பேரும், நவால்பராசி கிழக்கில் 154 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

1924 பேரை இன்னும் காணவில்லை. தவிர 1,545 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் சேறும் சகதியும் உள்ள சூழல் மீட்புப்பணிக்கு சவாலாக உள்ளது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top