News

ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: உக்ரைனில் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தையும் அடுத்து, குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா (Myla) எனும் இடத்தில் அமைந்துள்ள குறித்த கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலால் அங்கு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயரான தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிர்ச்சேதங்களுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, இது தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமரும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனைக் இலக்கு வைத்து ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகளையும் 267 ட்ரோன்களையும் ஏவித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளிலும் உக்ரைன் பதிலடித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top