News

சவுதியைத் திணறடித்த ஹவுதி – பற்றியெரியும் விமான நிலையங்கள்: மூவர் பலி: 36 பேர் காயம்

சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறி வைத்து நடந் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தி உள்ளது.

அப்ஹா (Abha) மற்றும் கிங் காலித் (King Khalid) விமான நிலையங்கள் மீதான இந்த தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கக் தூதரகம் அந்த நாட்டில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதில் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று, ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி பாதுகாப்புப் படைகள் உஷார்படுத்தப்பட்டு, வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top