News

ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கிய விமானம்; 190 பயணிகள் உயிர் தப்பினர்

 

புயல் காற்றில் சிக்கிய விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கியது.

இங்கிலாந்தின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்2 நிறுவனத்தின் விமானம், பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது ‘போலோ’ புயல் காரணமாக வீசிய அசுரக் காற்றில் சிக்கியது. தரையிறங்கிய நொடியில் நிலைதடுமாறிய விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் இருந்து நழுவி அருகில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்தது.

எனினும், அசுரக் காற்றில் சிக்கிய 70 டன் எடை கொண்ட விமானத்தை விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு மீண்டும் ஓடுதளத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் 190 பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த திக்… திக்… நிமிடங்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top