News

ஐரோப்பாவில் ஒரே நாளில் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்

பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா உட்பட சுமார் 16 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 27 விமானங்கள் ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு உள்ளாகியமை தொட்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால் பல பயணிகள் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன என்றும், வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன, மற்றும் போர் விமானங்களால் வான்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது சர்வதேச அளவில் பெரும் பாதுகாப்பு விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஒக்டோபர் மாத இறுதியில் ஐஸ்லாந்து விமான நிலையப் பகுதியில் அனுமதியற்ற ட்ரோன்கள் பறந்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

அத்தோடு ஜப்பான் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், கேதே பசிபிக் போன்ற பல முன்னணி விமான நிறுவனங்களின் தரவுத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top