News

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

மேற்கு துருக்கியில் உள்ள துறைமுக நகரமான இஸ்மிர் அருகே உள்ள இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும், நாட்டின் முன்னணி எஃகு உற்பத்திய தொழிற்சாலையில் ஒன்றான, அலியாகாவில் உள்ள ஹபாஸ் டெமிர் செலிக் ஆலையின் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்று கொதிகலனை ஏற்றிச் சென்ற ஒரு கிரேனின் சரிவு காரணமாக, கீழே இருந்த உலைக்குள் பொருட்கள் விழுந்ததால், இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஆளுநர் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சிகள், இந்த வெடிப்பு நிலத்தை உலுக்கியதாகவும், ஒருவர் ஆரம்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நம்பியதாகவும் கூறினர்.

தொழிற்சாலையை நடத்தும் நிறுவனம் ஒரு அறிக்கையில், ஆலையின் மின் வில் உலைகளில் ஒன்றில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறியது.

ஹபாஸ் ஆலை, துருக்கியின் முக்கிய துறைமுகமாகவும், பிரதான கப்பல் உடைப்பு மையங்களில் ஒன்றாகவும் திகழும் இஸ்மிர் மாவட்டத்தின் அலியாகாவில் அமைந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top