தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
டொனால்ட் லூவுடன் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தெற்காசிய பிராந்தியம் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் உள்ளிட்ட விடயங்கள்பற்றி அவர்கள், இலங்கையின் அரச தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் லூ, அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்க குழுவினரின் இலங்கை விஜயமும் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.