News

கனடாவில் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரிகளை இடைநிறுத்திவைக்க கனடா அரசாங்கம் முடிவு 

டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரிகளை இடைநிறுத்திவைக்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த முடிவு செப்டம்பர் 7 வரை நடைமுறையில் இருக்கும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வால் அந்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களும், சரக்கு வாகன ஓட்டுநர்களும் கூடுதல் செலவுகளைச் சந்திப்பதைத் தடுப்பதே மேற்படி தீர்மானத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

இதேவேளை, விமான எரிபொருள் மீதான வரிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top