News

போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா: 4 நாட்களில் 4 படகுகள் மூழ்கடிப்பு

 

 

பசிபிக் கடல் பகுதி வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கான நடவடிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க கடற்படை எடுத்து வருகிறது. போதை பொருட்கள் கடத்தி வந்ததாக கப்பல் ஒன்று தாக்கி அழித்தது அமெரிக்கா. அதன்படி தொடர்ந்து சந்தேகத்திற்குரிய படகுகளை தாக்கி அழித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி வரை 36 படகுகளை தாக்கி அழித்திருந்தது.

கடந்த சனிக்கிழமை 2 படகுகளை தாக்கி அழித்தது. திங்கட்கிழமை ஒரு படகை அழித்த நிலையில், நேற்று மற்றொரு படகை அழித்துள்ளது. 4-வது படகில் இருந்து 4 பேரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானுக்கு எதிரான போருக்காக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top