எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று(30.01.2023) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள மதகுருமார் ,உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இதற்கமைய போராட்டத்தின் இறுதி நாள் மட்டக்களப்பிற்கு வடக்கிலிருந்து திருகோணமலையினூடாக வரும் எழுச்சி பேரணியுடன் அம்பாறையிலிருந்தும் ஆர்பாட்ட பேரணி வருகைதரவுள்ளது.
இதனைதொடர்ந்து நாளைய தினம் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திப்புகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இடம்பெறவுள்ளது.