News

இலங்கைக்குள் அமெரிக்கா வகுக்கும் இரகசிய திட்டம்! ! ஆசியாவின் புதிய நகர்வு 

அமெரிக்கா தன்னுடைய எதிர்கால நடவடிக்கைக்காக இலங்கையின் இராணுவ நடவடிக்கையை தனது கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவை பொருத்தவரை இலங்கை அரசியலையும், படையினரையும் வசப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். தற்போது இலங்கை முழுமையாக அமெரிக்காவின் பக்கம் வந்துள்ளதுடன், பக்கத்து நாடான இந்தியாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதாவது மியன்மாரில் கற்றுக்கொண்ட பாடத்தினை மீண்டும் இலங்கையில் அமெரிக்கா கற்க கூடாது என்பதற்காக இவ்வாறு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய இராணுவத்தினரை விட அதிகளவிலான இராணுவத்தினரை இலங்கை கொண்டுள்ளமைனால் அவர்கள் போர் இல்லாத போதும் கூட பேரம் பேசும் சக்திகளாக உள்ளனர்.

இதன் காரணமாகவே 2010 ஆம் ஆண்டு சரத்பொன்சேகாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top