News

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொலைபேசி மூலமாக நேற்றையதினம் (03.06.2023) முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது.

இந்த நாட்டின் தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு வன்மையான கண்டனங்களையும் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிஸார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிவில் உடையில் நின்ற பொலிசார் தாக்குதல் நடத்தியதுடன், அநாகரிகமான வார்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன், துப்பாக்கியையும் நீட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சிறப்புரிமைகளை மீறி,பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக நடத்தும் அரசியல் உரிமை போராட்டத்தின் நியாயத்தை மீளவும் ஒருமுறை உறுதி செய்துள்ளது இந்த சம்பவம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையும், மறுவளமாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசியலமைப்பு வழங்கிய சிறப்புரிமைகளை மீறி சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களே கொலை மிரட்டல் விடுவதும், அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பதும் இலங்கைத்தீவின் இன ஒடுக்குமுறைக்கு மேலுமொரு தெளிவான சான்றாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிஸார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸார் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top