கனடாவின் அல்பர்டா மாகாணம் வைன்ரைட் நகரில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இராணுவ தளத்தில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குறித்த இராணுவ தளத்தில் இன்று (18) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தததோடு 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வீச்சு பயிற்சியின்போது இயற்கை எரிவாயுக்குழாய் மீது வெடிகுண்டு விழுந்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து கனடா நாட்டின் முக்கியத் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்:
பிரதமர் மார்க் கார்னி : “ஆல்பர்ட்டாவில் உள்ள சி.எஃப்.பி வெயின்ரைட் ராணுவ முகாமில் ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்திய தீவிரமான சம்பவம் நடந்துள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்கின்டி: “இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்ள ஆழமான வருத்தமடைகிறேன். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் : “இந்த தீ விபத்து மிகவும் துயரமானது. ராணுவப் பணியாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ்ரே, தான் பிரதமரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் பேசியதாகவும், மீட்புப் பணிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அனைவரும் அவசரகால அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மீட்புக் குழுவினருக்கு வழிவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
