News

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் காயம்

 

அமெரிக்காவின் லூசியானாவில் பேட்டன் ரூஜில் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் உணவுக்கூடத்தில் 2 குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top