News

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு.. 5 பேர் பலி – மக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்ததால் பரபரப்பு

 

உக்ரைன் தலைநகர் கீவின் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த அந்த மர்ம நபர் மக்களை நோக்கி சரமாரியான சுட்டுள்ளார்.

மேலும் பலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டியுள்ளார்.

பிணைக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top