Canada

கனடாவை உளவு பார்க்கும் இந்தியா., உளவுத்துறை குற்றச்சாட்டு

கனடாவை இந்தியா உளவு பார்த்ததாக அந்நாட்டு உளவுத்துறை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

கனடாவின் உளவுத்துறை அமைப்பு Canadian Security Intelligence Service (CSIS) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கனடாவில் வெளிநாட்டு தலையீடு மற்றும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சார்ந்த குற்றச்சாட்டுகளில், காலிஸ்தான் தீவிரவாதம் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIS அறிக்கையில், சில கனடா-அடிப்படையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள் (CBKEs) கனடாவின் நிறுவனங்களை பயன்படுத்தி வன்முறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சமூகத்திலிருந்து திரட்டப்படும் நிதி இந்தியாவில் வன்முறைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா வரலாற்று ரீதியாக கனடா அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருடன் மறைமுக உறவுகளை வளர்த்ததாகவும், விமர்சனங்களை அடக்குவதற்காக கண்காணிப்பு மற்றும் அழுத்தம் செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுடன் உறவை மீண்டும் சீரமைக்க முயற்சிக்கும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

2023-ல் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலைக்குப் பிறகு உறவு மோசமடைந்த நிலையில், சமீபத்தில் இரு நாடுகளும் உறவை மேம்படுத்த முயற்சித்து வருகின்றன.

இந்த குற்றச்சாட்டு, இந்தியா-கனடா உறவுகளில் புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், இரு நாடுகளின் தூதரக உறவுகள் மீண்டும் சோதனைக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top