அமெரிக்காவில் சரக்கு ரெயில் ஒன்றில் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள டெக்சாஸ் மாநிலத்தின் லாரெடோ நகரில் ரெயில்வே யார்டு பகுதியில் நின்றிருந்த சரக்கு இரயில் பெட்டி ஒன்றில் 6 பேரின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த ரெயில், எல்லை தாண்டிய போக்குவரத்து சேவைகளை வழங்கும் யுனியன் பசிபிக் ரெயில்வே நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
உயிரிழந்தவர்கள் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இவர்கள் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக எல்லை தாண்ட முயன்றபோது வெப்பம் அல்லது மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக எல்லையை கடக்கும்போது இது போன்ற உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது.
