‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு அப்பால் பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதிகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (24) வெளியிடப்பட்ட இரண்டாவது கட்டாய வெளியேற்ற உத்தரவு இதுவாகும். இதற்கு முன்னர் தெற்கு லெபனானிலுள்ள மேலும் 10 கிராம மக்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வெளியேற்ற உத்தரவுகளுக்கு முன்னும் பின்னும், லெபனானின் சில பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
