News

அமெரிக்காவில் தீவிர எபோலா பரிசோதனை !

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எபோலா பரிசோதனை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, அமெரிக்கா உலகளாவிய சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த 21 நாட்களுக்குள் காங்கோ குடியரசு , உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த பயணிகள் அனைவரும், தீவிர சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட விமான நிலையங்கள் வழியாக மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வொஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் மே 21 இரவு 11:59 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது மற்றும் அட்லாண்டா ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் மே 22 இரவு 11:59 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் மே 26 இரவு 11:59 மணிக்குப் பிறகு புறப்படும் விமானங்களுக்குப் பொருந்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் எபோலா நோய் பரவலுக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இணைந்து இந்தத் தீவிர பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.

இந்த விதிமுறைகள் அமெரிக்கக் குடிமக்கள் உட்பட பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளால் விமானங்கள் தாமதமாவது, ரத்து செய்யப்படுவது அல்லது வேறு வழிகளில் திருப்பி விடப்படுவது போன்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால், பயணிகள் தங்களது பயண விவரங்களை விமான நிறுவனங்களுடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அமெரிக்க அரசு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், பாதுகாப்பு அறிவிப்புகளை உடனுக்குடன் பெற ‘ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட் புரோகிராம்’ திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top