பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ளது சர்சத்தா மாவட்டம். இங்குள்ள உட்மான்சாய் என்ற பகுதியில் பாகிஸ்தானின் முக்கிய மதகுருவான ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் பாதுகாப்புப் போலீசாருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் வந்த அடையாம் தெரியாத சிலர் துப்பாக்கியால் அவர்கள் மீது சரமாரி சுட்டனர். இதில் இத்ரீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இத்ரீஸ், பாகிஸ்தானின் மூத்த மற்றும் மதிக்கப்படும் மதகுருமார்களில் ஒருவராகக் கருதப்பட்டார். மதக் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மூலம் மதிக்கப்பட்டார்.
இவரது மறைவை தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
