அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக மிச்சிகன் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இதனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் உள்ளடங்கியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மிச்சிகன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
