News

செம்மணி புதைகுழி அகழ்வில் 51 நாட்களில் 312 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்டத்தில், வியாழக்கிழமை (13) வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, செம்மணியில் இதுவரையில் 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில், முதலாம் கட்டத்தின் 09 நாட்களும் , இரண்டாம் கட்டத்தில், 45 நாட்களுமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில்,  மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மூன்றாம் கட்டத்தின் இன்றைய தினம் வியாழக்கிழமை 51 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 552  என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 540 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top