News

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ: 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

 

பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணம் அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்றது. இங்கு கடந்த சில வாரங்களாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் காடுகள் அனைத்தும் வறண்டு, எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் காணப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லக்லான் கிராமத்தின் அருகே உள்ள காடுகளில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக, இந்தத் தீ 2 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவிற்கு மளமளவெனப் பரவியது. தற்போது தீ கிராமத்திற்கு மிக அருகில் நெருங்கிவிட்டதால், உயிருக்கு அஞ்சிய 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேறியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 6 விமானங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top