News

பிரித்தானிய மக்களிடையே பரவும் கொடிய நோய்.. 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரித்தானியாவில் சால்மொனெல்லா பெக்டீரியா தொற்று பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தியமையினாலேயே இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கெஃபேக்கள் மற்றும் உணவகங்களில் உணவருந்தியவர்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் அல்லது கோழி இறைச்சி இதற்கு காரணமல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றின் காரணமாக இதுவரை மொத்தம் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 34 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருவருக்கு இரத்தத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 1 வயதுக் குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top